Connect with us

மத்திய அரசு மீது பழிபோடுறாங்க… திமுக அரசை எச்சரித்த ஜி.கே.வாசன்!

Gk vasan

செய்திகள்

மத்திய அரசு மீது பழிபோடுறாங்க… திமுக அரசை எச்சரித்த ஜி.கே.வாசன்!

மத்திய அரசு மீது பழிபோடுறாங்க… திமுக அரசை எச்சரித்த ஜி.கே.வாசன்!

தமிழகத்தில் மின்வெட்டு என்பது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் படிப்பை மிகப்பெரிய அளவில் பாதிப்பு உண்டாகும் என ஜிகே வாசன் கூறியுள்ளார்.

சென்னை தி நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

பின்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜி.கே வாசன்:- தமிழகத்தில் சொத்து வரி உயர்வு மின்வெட்டு உயர்வு அரசு திட்டங்களில் தாமதம் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை காரணம் கூறுவது ஆளும் திமுக அரசின் இயலாமையை எடுத்துக்காட்டுவதாகவும்.

மேலும் தனியாரிடம் கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் செலவு பொதுமக்களின் வரிப்பணத்தை திணிக்கக் கூடிய வீண் செலவு என்று கூற விரும்புவதாகவும், தமிழகத்தில் தேவையான மின்சாரத்தை மத்திய அரசு தொடர்ந்து கொடுத்து வருவதாகவும், அதை மத்திய அரசு உறுதி செய்து கொள்கிறது எனவே அதனை தொடர்ந்து தடையில்லாமல் கொடுக்க வேண்டும்.

அது எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை இருப்பினும் தமிழக அரசு மக்களுக்கு தேவைக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்.

சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் காக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.  பெண்களிடம் செயின் பறிப்பு கொள்ளை போன்றவைகள் திருடர்கள் தமிழகத்திற்கு வழக்கமாக பழக்கமாகிவிட்டது தமிழகத்தினுடைய சாமானியர்கள் கவர்னர் வரை பாதுகாப்பு தர வேண்டியது தமிழக அரசினுடைய கடமை குறிப்பிடுகிறது

தமிழகத்தில் கொரோனா மீண்டும் ஏற்பட்டிருக்கிறது இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முதல் தவணை இரண்டாம் தவணை ஊசியை தங்கள் வீட்டு நலன் கருதி,நாட்டு நலன் கருதி நாட்டின் பொருளாதார நலன் கருதி உடனடியாக இந்த இரண்டு தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும் மேலும் முக்கியமாக மத்திய மாநில அரசினுடைய கோட்பாடுகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் இன்று வரை எந்த ஒரு செயலையும் சரியாக செய்யவில்லை என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top