இனி இனிப்பு வழங்கினால் ஆவின் இனிப்புகள்தான் வழங்க வேண்டும்!

நம் தமிழகத்தில் ஏழை எளியவர்களுக்கு பால் ஆதாரமாக காணப்படுகிறது ஆவின் பால்.  இவற்றை அரசு ஏற்று நடப்பதால் இவற்றின் தரம் மற்றும் விலை மக்களால் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு காணப்படுகிறது.இறையன்பு

இந்த நிலையில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆவின் இனிப்பு வகைகளை குறித்து சில வலியுறுத்திக் கூறியுள்ளார். அதன்படி தீபாவளி இனிப்பு வழங்கும் பட்சத்தில் அனைவரும் ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று இறையன்பு வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து துறையின் அரசு செயலாளர்களுக்கு எழுதிய அந்த கடிதத்தில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு வலியுறுத்தியுள்ளார். துறை சார்ந்த அலுவலக கூட்டங்களிலும்  இனிப்பு வழங்கினால் கூட ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் பொருட்டாக இவை அமையும் என்று தமிழக செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.இதனால் ஆவின் இனிப்புகளை வழங்குவதன் மூலம் ஆவின் தரம் உயர்த்தப்படுவதோடு மட்டுமில்லாமல் பால்  வினியோகிக்கும் விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி உருவாகும் என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment