Connect with us

சிறுமி கருமுட்டை விற்பனை! 4 பேர் மீது குண்டர் சட்டம்!

Capture 2 1

தமிழகம்

சிறுமி கருமுட்டை விற்பனை! 4 பேர் மீது குண்டர் சட்டம்!

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறுமி அளித்த புகாரின் பேரில் அவரது தாயார் தாயாரின் இரண்டாவது கணவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதோடு கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட மருத்துவமனைகளுக்கு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு நடத்தினர். இதில் தனியார் மருத்துவமனைகள் முறைக்கேட்டில் ஈடுப்பட்டத்தை தெரியவந்ததையடுத்து அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதோடு பாதிக்கப்பட்ட சிறுமியும் அருகே R.N புதூரில் உள்ள அரசினர் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தொடர்புடையவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

தற்போது சிறுமியின் தாயார், வளர்ப்பு தந்தை, இடைத்தரகர் மாலதி மற்றும் ஆதார் மாற்றம் செய்த ஜான் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top