பிறந்தநாள் கொண்டாட்டம்: காதலியின் மண்டையை உடைத்த காதலன்!!

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவியை கட்டையால் காதலியின் மண்டையை உடைத்த முன்னாள் காதலனை  போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே மோதல்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் குமரி அடுத்த குளச்சல் பகுதியில் தனியார் கலை கல்லூரியில் பி.ஏ கடைசி ஆண்டு படித்து வந்த மாணவி மற்றும் அஜின் என்பவர் பள்ளி படிக்கும் போதிலிருந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த 6 ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அந்த மாணவி காதலனை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவியின் பிறந்தநாள் விழாவை கல்லூரி மாணவ, மாணவிகளுடம் கொண்டாடியுள்ளார்.  அந்த சமயத்தில்  மரம் ஏரி வீட்டிற்குள் புகுந்த அஜின் மரக்கட்டையால் வீட்டில் இருந்தவர்கள் மற்றும்  காதலியை தாக்கி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதில் மண்டை உடைந்து மருத்துவமனையில் மாணவி  சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும்,  அப்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அஜினை வலை வீசி தேடி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.