Connect with us

காதலித்து ஏமாற்றிய காதலன்.! – கடைசி வரையில் போராடி கரம்பிடித்த காதலி.!!

HUSBAND WIFE MARRIED LIFE024756

தமிழகம்

காதலித்து ஏமாற்றிய காதலன்.! – கடைசி வரையில் போராடி கரம்பிடித்த காதலி.!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஏமாற்ற நினைத்த காதலனுக்காக விஷம் அருந்தி மரணத்தின் நுனி வரை சென்று மீண்டும் காதலனை கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாச்சலம் காமராஜ் நகரை சேர்ந்த ஆரோக்கிய ஷாலிணி என்ற பெண்ணும் துரவலூர் கிராமத்தை சேர்ந்த அருள் ராஜ் என்ற இளைஞரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு வெளிநாடு சென்று வேலைப்பார்த்து வந்த அருள் ராஜ் சொந்த ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த காதலி ஆரோக்கிய ஷாலிணி திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அப்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் அருள்ராஜ் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் விரத்தி அடைந்த ஷாலிணி அருள்ராஜ் வீட்டின் முன்பு விஷம் அருந்தியுள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் காதலன் அருள்ராஜ் சமாதானப்படுத்திய நிலையில் இன்றைய தினத்தில் போலீசார் திருமணம் செய்து வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top