பல பகுதிகளில் காதல் விவகாரத்தில் தான் கொலைகள் அதிகமாக நிகழ்கிறது. இந்த நிலையில் காதல் விவகாரத்தில் காதலியின் வீட்டை ஜேசிபியால் இடித்து தப்பி சென்ற காதலனை சரமாரியாக வெட்டிய சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடங்கியுள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகேந்திரவாடி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் அருள். அவரின் மகள் வனிதாவும் பக்கத்துவீட்டு நபரான சக்திவேல் என்பவரும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த வனிதாவின் தந்தை அருள் மகளை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆத்திரமடைந்த காதலன் சக்திவேல் ஜேசிபி ஆல் காதலியின் வீட்டை இடித்து விட்டு தப்பி ஓடினார். கடும் கோபமடைந்த அருள் தனது மகனாகிய தினேஷுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி பத்து கிலோமீட்டர் தூரம் துரத்தி சக்திவேலை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமலி காவல் நிலையம் வழக்கு பதிவு செய்தது. இந்த கொலை வழக்கில் தந்தை அருள், சகோதரர் தினேஷ், உறவினர்கள் சதீஷ், நந்தகுமார், கலையரசன் ஆகிய ஆகிய 5 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.