பள்ளி பேருந்தில் திடீரென கீழே விழுந்த சிறுமி: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

கேரளாவில் பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்த எல்.கே.ஜி மாணவி நூலிழையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாவே விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இருக்கும் ஆலுவா வழுங்காட்டுக்கடை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பள்ளியின் பேருந்தில் இருந்து எல்கேஜி படிக்கும் சிறுமி ஒருவர், எதிர்பாராதவிதமாக சாலையில் கீழே விழுந்தார். இந்த சூழலில் பின்னால் வந்து கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநர் பிரேக் போட்டதால் குழந்தை அதிஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சென்று குழந்தையை மீட்டனர். மேலும், சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment