தூத்துக்குடி சில்லாங்குளம் பள்ளி மாணவி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்ட நிலையில் முதற்கட்ட விசாரணை பள்ளியில் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சில்லாங்குளம் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவி கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
அதோடு மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் தங்களுக்கு தெளிவான தகவல் அளிக்கப்படவில்லை என்பதால் பசுவந்தன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும் மாணவியின் உறவினர்கள் சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தற்போது சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.
அதன் படி, சிபிசிஐடிக்கு போலீசார் பள்ளியின் கழிவறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.