Connect with us

சிறுமியின் கருமுட்டை விற்பனை: தமிழகம் முழுவதும் ஆய்வு!

egg

Tamil Nadu

சிறுமியின் கருமுட்டை விற்பனை: தமிழகம் முழுவதும் ஆய்வு!

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச்செயல்கள் வெளிஉலகத்திற்கு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துயது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அச்சிறுமியின் தாய், அவருடைய கள்ளக்காதலர் சையத் அலி  மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த பெண் புரோக்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்காக தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு காப்பகத்தில் இருக்குக்கும் அச்சிறுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது சில தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் இதன் எதிரொலியாக இன்று தமிழகத்தில் இருக்கும் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் 16-வயது சிறுமியின் கருமுட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதின் காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top