மத்திய பிரதேசத்தில் 4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை!

மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் 4 கால்களுடன் குழந்தை பிறந்துள்ள சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அடுத்த சிக்கந்தர் கம்பூ பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி குஷ்வாஹா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.

ஆன்லைன் சூதாட்டம்! என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை..!!

இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் கமலா ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து 4 கால்களுடன் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதோடு 2.4 கிலோ எடையுடன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை குழுமத்தின் மேலாளர் டாக்டர் ஆர்.கே.எஸ் தாகத் கூறுகையில் பொதுவாகவே 4 கால்களுடன் குழந்தை பிறப்பது அரிதான நிகழ்வு என தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை.. நாளை மீண்டும் திறப்பு..!!

குழந்தையின் 4 கால்களில் 2 கால்கள் ஊனமுற்றதாகவும், 2 கால்கள் மட்டுமே செயல்படும் என தெரிவித்தார். இதற்கு அறிவியலில் இஸ்கியோபாகஸ் என்று அழைக்கப்படுகிறது.

அதாவது கரு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும் போது குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதி இரண்டு கூடுதல் கால்களுடன் வளரும் என தெரிவித்தார். இருப்பினும் பெரும்பாலானவைகளில் 2 கால்கள் செயலற்று காணப்படும் என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.