Connect with us

நித்யானந்தா ஆசிரமத்தில் இளம்பெண் கடத்தல்!!! தந்தை புகார்;

Nithyanan

தமிழகம்

நித்யானந்தா ஆசிரமத்தில் இளம்பெண் கடத்தல்!!! தந்தை புகார்;

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள மகளை மீட்கக் கோரி தந்தை ஒருவர் புகார்  அளித்துள்ளது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் நித்யானந்தா தற்போது கைலாச நாட்டில் இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நித்தியானந்தா ஆசிரமம் நடத்தி வரும் சூழலில் அங்கு நிறைய இளம்பெண்கள் அதிகம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நாகேஷ் என்பவருக்கு 3 மகள்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நாகேஷின் 3-வது மகள் நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி இருந்ததாகவும் அடிக்கடி அங்கு சென்று தனது மகளை பார்த்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

தற்போது அந்தப் பெண் கர்நாடகா மாநில ஆசிரமத்தில் இல்லாததால் அவரை திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்து கடத்தியிருக்கலாம் என்ற நோக்கத்தில் அப்பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் நாகேஷ் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதன் படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தனிப்படை போலீசார் ஆய்வு நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top