பூனையை காணவில்லை… கண்டுபிடித்து தந்தால் 5000 ரூபாய் பரிசு…. வைரலாகும் போஸ்டர்…..

மனிதர்கள் யாரையாவது காணவில்லை என்றால் டிவி மற்றும் பத்திரிகைகளில் விளம்பரம் அளிப்போம் அல்லது காணவில்லை என்ற அறிவிப்பு போஸ்டர்களை வீதிகளில் ஒட்டுவது வழக்கம். ஆனால் கோயம்புத்தூரில் ஒரு நபர் தான் ஆசையாக வளர்த்த பூனையை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

missing

பொதுவாக கிராமங்களில் வசிக்கும் மக்கள் அவர்களின் வீடுகளில் வளர்க்கும் ஆடு மாடு போன்ற கால்நடைகளை தங்கள் வீட்டில் ஒரு உறுப்பினராகவே கருதுவார்கள். குடும்ப உறுப்பினர்களை போலவே அவைகளையும் பாசத்துடன் பார்த்து கொள்வார்கள். ஆனால் நகரங்களில் கால்நடைகள் வளர்க்கும் வசதி இல்லாததால் இங்கு நாய் பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்கள்.

இருப்பினும் கிராம மக்களை போலவே நகர வாசிகளும் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள் மீது அதீத பாசம் வைத்துள்ளனர். சில சமயம் இவர்கள் வைத்திருக்கும் பாசத்தை பார்த்தால் நமக்கே வியப்பாக இருக்கும் அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது.

அந்த வகையில் கோயம்புத்தூரை சேர்ந்த நபர் ஒருவர் தான் ஆசையாக வளர்த்த பூனையை காணவில்லை என போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் “பூனையின் புகைப்படத்துடன் பூனை காணவில்லை. பூனையின் பெயர் ஜெசி, வயது 6, அடையாளம் உதட்டில் மச்சம் இருக்கும். நவம்பர் 29 ஆம் தேதி முதல் காணவில்லை.

பூனையை கண்டால் கீழ்கண்ட தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்” மேலும் பூனையை கண்டுபிடித்து தருபவருக்கு 5000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் கோயம்புத்தூரில் சில இடங்களில் ஓட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ஒட்டியவர் ராமநாதபுரத்தை சேர்த்தவர் என்பது கூடுதல் தகவல்.

செல்லப்பிராணி தானே காணாமல் போனால் வேறு ஒரு பூனையை வாங்கி கொள்ளலாம் என நினைக்காமல் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரொக்க பரிசும் வழங்கப்படும் என அறிவித்துள்ள பூனையின் உரிமையாளரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment