Connect with us

நயன்தாரா – விக்னேஷ் திருமணத்திற்கு உதயநிதி கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா?

nayan vignesh marriage stills1 1654838912

பொழுதுபோக்கு

நயன்தாரா – விக்னேஷ் திருமணத்திற்கு உதயநிதி கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தின் படப்பிடிப்பில் தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது.கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர்.

காதலர்களாக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா ஜோடி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் முன்னிலையில் கோலாகலமாக ஜீன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

Nayanthara Vignesh

இவர்களின் திருமணத்தை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் நயன் – விக்கி திருமண வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாகவும், அதில் நயன்தாரா வாழ்க்கை பயணம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தில் ஷாருக்கான் , அட்லி ,ரஜினி ,மணிரத்தினம் ,விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி என பல பிரம்பலங்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் அவர்களது புகைப்படத்தை விக்னேஷ் தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலானது.

Nayanthara and Vignesh Shivan

இந்நிலையில் தற்போழுது நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கினார். இதில் தமிழ் பாரம்பரியம் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை நிகழ்ச்சிகளாக 3 நேரம் நேரலை செய்யப்பட்டது.

இந்த கலை நிகழ்ச்சிகள் பெரும் வெற்றியை பெற்று பேசும் பொருளாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் பார்த்து பிரபலங்கள் பலரும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா வாய்ப்பு குறித்து பேசியுள்ளார்.

விக்னேஷ் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்து பிடித்து உதயநிதி அண்ணா அழைத்து பேசினார்கள். அப்போது தான் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை நடத்துவது குறித்து கேட்டார்கள். இதுதொடர்பாக ஒரு மீட்டிங் நடைபெற்றது.

nayanthara vignesh shivan wedding photos jpg 710x400xt 1

10 நாட்கள் சைவத்துக்கு மாறும் ஏ.ஆர்.ரஹ்மான்! வைரல் பதிவு!

இந்த வாய்ப்புதான் நயன்தாராவுக்கு உதயநிதி கொடுத்த கல்யாண பரிசாக விக்னேஷ் சிவனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் என கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top