#Breaking புதிய கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்; கலக்கத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய குலாம் நபி ஆசாத் ஜனநாயக ஆசாத் விடுதலைக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையில் மாற்றம் தேவை என 23 தலைவர்கள் மேலிடத்திற்கு கடிதம் அனுப்பினர். அதில் “பெயரளவுக்கு மட்டுமே நீங்கள் கட்சியின் தலைவராக இருக்கிறீர்கள். முடிவுகள் அனைத்தையும் ராகுல் காந்தியும் அவரது பாதுகாவலர்களுமே எடுக்கிறார்கள். கட்சியில் மூத்த தலைவர்களுக்கு தற்போது முக்கியத்துவம் இல்லை. மூத்த தலைவர்களின் ஆலோசனையுடன் முடிவுகள் எடுக்கும் கலாச்சாரத்தை ராகுல் காந்தி சீரழித்துவிட்டார்” என சோனிய காந்தியை குறிப்பிட்டிருந்தார்.

இதனை காங்கிரஸ் மேலிடம் கண்டுகொள்ளாதது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆகஸ்ட் 26ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு விலகினார்.

இதனையடுத்து காஷ்மீர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரை நிகழ்த்திய குலாம் நபி ஆசாத் 10 நாட்களுக்கு புதிய கட்சியை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

தான் அறிவிக்க உள்ள கட்சியின் பெயர் உருது வார்த்தைகளைக் கொண்டதாகவோ அல்லது சமஸ்கிருத வார்த்தைகளைக் கொண்டதாகவோ இருக்காது என்றும், மக்கள் அனைவருக்கும் புரியும்படியான இந்திய பெயராக அது இருக்கும் என்றும் கூறி இருந்தார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை பெற்றுத் தருவது, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான நில உரிமையை மீட்டுத் தருவது, மாநில மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது ஆகியவற்றில் தனது புதிய கட்சி கவனம் கொடுக்கும் என குலாம் நபி ஆசாத் கூறி இருந்தார்.

இந்நிலையில் இன்று சற்று நேரத்திற்கு முன்னதாக தனது கட்சியின் பெயரை குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார். “ஜனநாயக ஆசாத் விடுதலை கட்சி” என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment