டிஜிட்டல் மயம் குறித்து இந்தியாவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்று கொள்வோம்: ஜெர்மனி தூதர்

டிஜிட்டல் மயம் குறித்து இந்தியாவிடமிருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என ஜெர்மனி தூதர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் மயமாகி வருகிறது என்பதும், டிஜிட்டல் மயத்தில் மிக அதிகமாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமங்களில்கூட தற்போது இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட்போன் வந்துள்ளதை அடுத்து இதன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது எப்படி என்பதை கிராமத்தினர் பழகிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்யப்படும் தொகை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

upiஇந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தங்கியிருக்கும் ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் என்பவர் டிஜிட்டல் மயம் பற்றி இந்தியாவிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். நான் சில மாதங்களாக இந்தியாவில் இருக்கும் போது இந்தியாவில் டிஜிட்டல் மயம் எந்த அளவுக்கு விரிவடைந்துள்ளது என்பதை கண்டு ஆச்சரியமடைந்து உள்ளேன்.

மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களை டிஜிட்டல் மயமாக பயன்படுத்துவதை ஒப்பிடும்போது நாம் இன்னும் பின்னோக்கி இருக்கிறோம் என்றுதான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் டிஜிட்டல் மக்கள் மத்தியில் டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து நாங்கள் தீவிரமாக கற்றுக் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.