Connect with us

தமிழகத்தில் 10,12-ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியீடு!!

பொதுத் தேர்வு

தமிழகம்

தமிழகத்தில் 10,12-ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியீடு!!

கடந்த மாதம் தமிழகத்தில் இருக்கும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அண்மையில் அறிவித்திருந்தது.

கடந்த காலங்களில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெவ்வேறு நாட்களில் வெளியிடப்படும் நிலையில் ஒரே நாளில் 2 வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் வெளியீடுபடுவது இதுவே முதல் முறை ஆகும். இதனிடையே இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

இந்நிலையில் முதலில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இதனைத் தொடர்ந்து 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது 12-ஆம் வகுப்பில் 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இதில் மாணவிகள் 96.32% என்றும் மாணவர்கள் 90.96% என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் 10-ஆம் வகுப்பில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இதில் மாணவிகள் 94.38% என்றும் மாணவர்கள் 85.83% தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top