10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு – அன்பில் மகேஷ் தகவல்..

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது தேர்வு நடைபெறாமல் இருந்தது .

இதனால் இந்த வருடமும் பொதுதேர்வு நடைபெறாமல் இருக்குமோ என்ற கேள்வி மாணவர்கள் மத்தில் எழுந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு பொதுதேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் 10ம் வகுப்புக்கான தேர்வுகள்  மே.6-ஆம் தேதி தொடங்கி மே.30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்புக்கான தேர்வுகள் மே.9-ஆம் தேதி தொடங்கி  மே.31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 12ம் வகுப்புக்கான தேர்வுகள் மே.5ஆம் தேதி தொடங்கி மே.28ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் தொடங்குவதாக  தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை இன்னும் 1 மணி நேரத்தில் http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படுவதால் இந்த இணைய தளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment