10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி போகவில்லை! மார்ச்-ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்!!

2020ஆம் ஆண்டு தமிழகத்தில் அனைவருக்கும் ஆல் பாஸ் என்ற முறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றனர். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழகத்தில் ஆல் பாஸ் திட்டம் கிடையாது என்று கூறப்பட்டது.

 அன்பில் மகேஷ்

இதனை தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதி மே மாதம் முதல் வாரத்தில் நடக்கும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என்று கூறியுள்ளார்.

அதன்படி பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி போக வாய்ப்பே இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் வினாத்தாள் வடிவமைப்பு இருக்கும் என்று மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment