பொதுக்குழு விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேல்முறையீடு மனுவை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரையில் பொதுச் செயலாளருக்கு தேர்தல் நடைபெறாது என கூறினார்.

இதனை பதிவு செய்த நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீடு மனுதாக்கலுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதே சமயம் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை நவம்பர் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும், தற்போது நிலவி வரும் சூழலில் இத்தகைய தீர்ப்பானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment