Connect with us

அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு: உடனே பணிக்கு திரும்ப உத்தரவு

News

அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு: உடனே பணிக்கு திரும்ப உத்தரவு

13447c6e632179e0a66d3f350e3b69e6

அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் இதனை அடுத்து உடனடியாக அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது அரசியல் சூழல் சிக்கலாக இருக்கும் நிலையில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி புதிய அரசை அமைக்க முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது 
முன்னாள் அதிபரின் காலத்தில் அரசு ஊழியர்கள் தாலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் தாலிபான்கள் அரசு ஊழியர்களை பழிவாங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது 

ஆனால் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது என்றும் எனவே அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தாலிபான்கள் செய்திப்பிரிவு உத்தரவிட்டுள்ளது

இருப்பினும் அரசு ஊழியர்கள் யாரும் பணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது பல அரசு ஊழியர்கள் ஏற்கனவே வெளிநாட்டுக்கு சென்று விட்டார்கள் என்பதும் மேலும் பலர் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்து வருவதாக தாலிபான்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top