உச்சகட்ட பரபரப்பு; பம்புசெட்டில் பதுக்கிய 2,180 ஜெட்டின் குச்சிகள், 1,130 டெட்டனேட்டர்கள் பறிமுதல்!

வேலூர் அருகே பம்பு செட்டில் பதுக்கிய 2,180 ஜெலட்டின் குச்சிகள், 1,130 டெட்டனேட்டர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மடையாப்பட்டு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வேப்பங்குப்பம் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பாண்டு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பம்பு செட்டில் சாக்கு மூட்டையில் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து நிலத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தனக்கு சொந்தமான நிலத்தினை சுரேஷ் என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை அடுத்து சுரேஷ் என்பவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் விவசாய நிலத்தில் உள்ள பம்பு செட்டில் 2,180 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 1,130 டெட்டனேட்டர்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பம்பு செட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார். சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுரேஷ் கே.வி குப்பம் அடுத்த அர்ஜுனாபுரம் கிராமத்தில் உள்ள வெடி மருந்து உரிமம் வைத்திருக்கும் பத்மநாபன் என்பவரிடமிருந்து டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை வாங்கி வந்து பதுக்கி வைத்திருப்பதும், இதனை டிராக்டரில் கம்பரசர் பொருத்திய டிராக்டர் மூலம் கிணறு மற்றும் குவாரிகளில் உரிமம் பெறாமல் வெடி வைத்து வருவது தெரியவந்துள்ளது.

ஒடுகத்தூர் அருகே சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்களை விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.