துபாயில் ரூம் கட்டணம் கேட்டு மிரட்டல்… காயத்ரி ரகுராம் மீது புகார்!!

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் அவர் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு IPF ஒருங்கிணைப்பாளரான கே.ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 25 வருடமாக துபாயில் வசித்து வருவதாகவும், கடந்த வருடம் அக்டோபர் மாதம் 16-ம் தேதியில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் அவர்களை ஐக்கிய அரபு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தாக தெரிவித்துள்ளார்.

துபாயில் ரூம் கட்டணம் கேட்டு மிரட்டல்… காயத்ரி ரகுராம் மீது புகார்!!

இந்த சூழலில் சொந்த வேலை காரணமாக நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே வந்தாகவும், இது குறித்து கேட்டப்போது நண்பரோடு சொந்த வேலைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் 8 நாட்கள் ஹோட்டலில் தங்கியதில் ரூ.2.75 கட்டணம் செலுத்த மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

அதாவது தன்னுடைய பதவியேற்பு விழாவில் முன்கூட்டியே துபாய் வந்துவிட்டு அதற்கான கட்டணத்தை என்னிடம் வசூலிக்க நினைப்பது தவறானது என கேட்ட போது காயத்ரி ரகுராம் மிக மோசமான வார்த்தைகளில் தீட்டியதாக ரவிச்சந்திரன் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் டோக்கன்கள் வினியோகம்!!

மேலும் கட்சிக்கும் அழைத்த நிகழ்ச்சிக்கும் உண்மையாக செயல்படாமல் இருந்ததாக புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.