#Breaking என்னால பாஜகவுக்கு களங்கமா? – தூக்கி அடித்த பாஜகவிற்கு காயத்ரி ரகுராம் பதிலடி!

தமிழ்நாடு பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் பொறுப்பு உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பாஜக பெண் நிர்வாகியை அவதூறாக பேசிய திருச்சி சூர்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கைது செய்ய வேண்டும் என்றும் காயத்ரி ரகுராம் வலியுறுத்தி இருந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் கட்சியின் ஒப்புதல் பெற்றே இனி பாஜக நிர்வாகிகள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும்.

கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால், அதை கட்சியின் ஊடகப்பிரிவு தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நான் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியிருப்பது வருத்தமளிக்கிறது” என்று கட்சியிலிருந்து 6 மாத காலம் நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் காயத்ரி ரகுராம் கூறியது: “பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருந்ததால் இதுவரை மியான்மர், கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 28 தமிழர்களை இருந்து மீட்டு கொண்டு வந்துள்ளேன். இதுபோன்ற விஷயங்கள் பலவற்றை நான் எனது சொந்த செலவிலேயே செய்துள்ளேன். அப்படியிருக்கும்போது, நான் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியிருப்பது வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.