Entertainment
லாஸ்லியா கழுத்தில் கருப்பு கயிறு கட்டிய கவின்!!
பிக் பாஸ் நிகழ்ச்சி வார இறுதிக்குப் பின் ஏதாவது மாற்றம் ஏற்படும் இருந்த பார்வையாளர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே ஆகும், லாஸ்லியாவும் கவினும் யார்னாலும் என்ன்னாலும் சொல்லிக்கோங்க, ஒரு வாட்டி முடிவெடுத்துட்டா எங்க பேச்சை நாங்களே கேக்கமாட்டோம் அப்டிங்கற பாணியில சுத்திட்டு இருக்காங்க.
நேற்றைய நிகழ்ச்சியானது அதன் முந்தைய தின நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகத் துவங்கியது. ஒரு வழியாக அது முடிவடைய, இந்த வாரத்திற்கான டாஸ்க் தொடங்கியது, இந்த டாஸ்க்குக்காக போட்டியாளர்கள் இரு கிராமங்களாக பிரிக்கப்பட்டனர்.

இதில், சாண்டி, முகென், லோஸ்லியா, வனிதா ஆகியோர் ஒரு குடும்பமாகவும், கவின், சேரன், தர்ஷன், ஷெரின் ஆகியோர் ஒரு குடும்பமாகவும் பிரிக்கப்பட்டனர்.
ஒவ்வொருவரும் அவரவர்க்கு கொடுக்கப்பட்ட உடைகளை அணிந்ததுடன், கிராம கெட்டப்பிற்கு தகுந்தாற்போல் தயார்படுத்திக் கொண்டனர், அப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உடைகளை அணிந்த பிறகு லோஸ்லியா தனக்குரிய கெட்டப்பிற்காக கழுத்தில் கருப்பு நிற கயிறு அணிய வேண்டும் என்று கவினிடம் கூறியுள்ளார்.
அப்போது கிடைத்தது நல்ல சான்ஸ் என்பதுபோல கவின், லோஸ்லியாவின் கழுத்தில் கருப்பு நிறக் கயிறை கட்டியுள்ளார். கட்டும்போது வெறும் கயிறு மட்டும்தானா இல்லை வேறு எதுவும் மணி இருக்கிறதா என்று லோஸ்லியாவிடம் கேட்க மீண்டும் ஆரம்பமானது இவர்கள் காதல் கதை.
