Entertainment
சேரனை கிண்டல் செய்யும் கவின்- விழுந்து விழுந்து சிரிக்கும் லோஸ்லியா!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மூன்று நாட்கள் நடந்த ஹோட்டல் விருந்தாளி லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் முடிவுக்கு வந்தது. எப்போதும்போல் போட்டியில் சிறப்பாக விளையாடியவர்கள் மற்றும் மோசமாக விளையாடியவர்கள் தேர்வு செய்யும் செய்முறை தொடங்கியது.
மோசமாக ஆடியவர்கள் தேர்வின்போது லாஸ்லியாவினை தேர்வு செய்தார் சேரன். ஆனால் கவின், லோஸ்லியாவைக் காப்பாற்ற அபிராமியைத் தேர்ந்தெடுத்தார், அந்தக் கருத்தை வலுவாக சொல்லி அவரை ஜெயிலுக்கு அனுப்பினார் கவின். இதற்கு காரணம் அபிராமி மீதான தனிப்பட்ட பகை என்பதைவிட, லோஸ்லியா மீதான காதல்தான் என பார்வையாளர்கள் கூறினர்.

இதனைப் பொறுக்க முடியாத மதுமிதா கவினிடம் சண்டையிட்டார், இது பெரிய வாதமாக மாறியது. இறுதியில், கஸ்தூரியும் அபிராமியும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இறுதியில் கவின், தன்னுடைய நண்பர்களான சாண்டி, தர்சன், முகின், காதலி லோஸ்லியாவுடன் உட்கார்ந்து கொண்டு உள்ளே சேரன், மதுமிதா, வனிதா பேசுவதை கேலி செய்தனர். அப்போது லோஸ்லியாவும் சேர்ந்து கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.
சேரனை கவின் வேண்டுமென்றே கேலி செய்வதனை வழக்கமாகக் கொண்டுள்ளார், ஆனால் சேரனை அப்பாபோல பாவித்துவரும் லோஸ்லியா இதற்கு மறுப்பு தெரிவித்ததில்லை என பார்வையாளர்கள் பலரும் அவர் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
