Connect with us

சேரன் – லாஸ்லியாவைப் பிரிக்க போராடும் கவின்!

Entertainment

சேரன் – லாஸ்லியாவைப் பிரிக்க போராடும் கவின்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது, ஆனால் முந்தைய சீசன்களைவிட, எளிதில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட இந்த சீசன் டிஆர்பியானது ஏறியும் இறங்கியதுமாகவே உள்ளது. ஒரு நிலைப்பாட்டுடன் இருக்கவில்லை என்பதே இந்த நிகழ்ச்சியில் உள்ள சொதப்பல்களைக் காட்டுகிறது.

சாண்டியும், கவினும் சேரப்பா நீ பேசினால் கொஞ்சம் போரப்பா என்று பாட்டுப் பாடியபோது வருத்தமானார் சேரன். மறுநாள் சாண்டி மற்றும் கவினுடன் இந்த விஷயம் தனக்கு வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்தார்.

17febafea6cccd7f3057c989102c0465-1

அதனால் கவின், சாண்டி இருவரும் சேரனிடம் மன்னிப்பு கேட்டனர். வார இறுதியில் சேரன் இவ்வாறு செய்தது தவறு என்று கூறினார் கமல் ஹாசன், சேரனும் இதற்கு கமல்ஹாசனிடம் மன்னிப்புக் கேட்டார்.

ஆனால் கவினும் சாண்டியும் தங்களிடம் நேரடியாக வந்து மன்னிப்பு கேட்கவில்லை என்று புறணி பேசி வருகின்றனர். கவின் அவர் பங்குக்கு சேரனைப் பற்றி எப்போதும்போல தவறாகப் பேச, சாண்டியும் அதனை ஆமோதிக்கும் விதமாகப் பேசினார்.

லாஸ்லியா சேரனிடம் பேசுவதை தாங்கிக் கொள்ளாத இவர், இவர் உன்னிடம் டிராமா போடுவதை என்னால் சகிச்சுக்க முடியலை. உன் தரப்பில் உனக்கு நியாயம் கிடைச்சுருச்சுன்னா விட்டுடு. எங்களுக்கு கிடைக்கலை என்று லோஸ்லியாவிடம் மீண்டும் மீண்டும் கூறி சேரன் லாஸ்லியா உறவை உடைக்கிறார் கவின்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top