Connect with us

லோஸ்லியாவைக் காப்பாற்ற அபிராமியை ஜெயிலுக்கு அனுப்பிய கவின்!

Entertainment

லோஸ்லியாவைக் காப்பாற்ற அபிராமியை ஜெயிலுக்கு அனுப்பிய கவின்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படுசரிவினைச் சந்தித்தது.

வைல்டு கார்டு என்ட்ரியாக கஸ்தூரி அனுப்பப்பட்டும் எந்தப் பலனும் அளிக்கவில்லை. இதனால் தயாரிப்புக் குழு எவ்வளவு முயன்றாலும் இழந்த டி ஆர் பியை வனிதாவால் மட்டுமே மீட்டுத் தர முடியும் என்று தெரிந்துகொண்டு வனிதாவையே ஹோட்டல் விருந்தாளியாக வீட்டுக்குள் அனுப்பினர்.

மூன்று நாட்கள் நடந்த ஹோட்டல் விருந்தாளி லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் முடிவுக்கு வந்தது. எப்போதும்போல் போட்டியில் சிறப்பாக விளையாடியவர்கள் மற்றும் மோசமாக விளையாடியவர்கள் தேர்வு செய்யும் செய்முறை தொடங்கியது.

78eb0534ca25e5fa57369b6eb9abb7c4

மோசமாக ஆடியவர்கள் தேர்வின்போது நேர மேலாண்மை இல்லாத லாஸ்லியாவினை தேர்வு செய்தார் சேரன்.

ஆனால்  கவின், லோஸ்லியாவைக் காப்பாற்ற அபிராமியைத் தேர்ந்தெடுத்தார், அத்துடன் அபிராமியே மோசமாக ஆடியவர் என்பதை வலுவாக மீண்டும் மீண்டும் சொல்லி அனைவரையும் நாமினேட் செய்ய வைத்தார் கவின்.

இதன்மூலம் லோஸ்லியாவிற்குப் பதில், அபிராமியே மீண்டும் மோசமானவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். லோஸ்லியாவிற்கு ஒன்று என்றால் ஓடி வருவது லோஸ்லியாவின் நண்பர் கவின் தான் என்று லோஸ்லியா ஆர்மியினர் கூறி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top