Entertainment
காதலுக்கு ஐடியா சொல்லும் கவின்!… கடுப்பான அபிராமி
பிக் பாஸ் சீசன் 3 விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் கடந்த 3 நாட்களாக கேமிரா என்ற ஒரு விஷயத்தையே முற்றிலும் மறந்துவிட்டனர். இன்றைய புரோமோ வீடியோவில் காதலிப்பது பற்றி ஆலோசனை வழங்குவதாக தெரிகிறது.
போட்டியின் முதல் நாளே பிக் பாஸ் வீட்டில் நடிகை அபிராமி தனக்கு கவினை தெரியும் என்றும், அவர் மீது தனக்கு ஒருவித அப்பெக்சன் உள்ளது என்றும் ஷெரின், சாக்ஷி ஆகியோரிடம் கூறியிருப்பார்.

அதன் பிறகு தனது காதலை கவினிடம் வெளிப்படுத்த முயன்றார். இந்த நிலையில், அபிராமி முகென் ராவ்வை தனது நண்பர் என்று சொல்லி நெருக்கமாக பழகி கவினை வெறுப்பேற்றி வருகிறார்.
அபிராமி வாட்டர்பாட்டிலை வைத்து குழந்தை போன்று பாவித்து வந்ததனால் மதுமிதா மற்றும் அபிராமி ஆகியோருக்கு இடையில் பிரச்சினை ஆரம்பமானது, இது ஓரிரு நாட்களில் வனிதா, மதுமிதா பிரச்சனையாக மாறியுள்ளது.
பிரச்சினையைத் தூக்கி கெடப்பில் போட்டுவிட்டி, காதலில் சொதப்புவது எப்படி என்று மோகன் வைத்யா கேள்வி எழுப்புகிறார், கவின் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், உங்க காதலியிடம் இருந்து நீங்கள் விலக நினைத்தால் அவர்கள் உங்கள் மீது பழி சுமத்துவதற்கு முன், நீங்கள் அவர்கள் மீது பழி சுமத்திவிட வேண்டும். இது ஒரு காதலில் சொதப்பினால் ஓகே. ஆனால், 2 அல்லது 3 காதலில் சொதப்புவது எப்படி என்று சேரன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு 3 பேரையும் ஒரே இடத்தில் வைத்து லவ் பண்ணக்கூடாது.
நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? என்று கேட்ட கேள்விக்கு, இப்போது இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் நான் மாட்டிக் கொள்வேன் என்று நினைக்கிறேன் என்று கவின் கூறியுள்ளார். அது லாஸ்லியாவையா இல்லை அபிராமியையா இல்லை சாக்ஷியையா என்று பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
