Entertainment
கவின்- லாஸ்லியா காதலைப் பற்றி பாட்டுப் பாடிய சாண்டி!!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது ஒரு காலத்தில் சண்டை, சச்சரவாக மட்டுமே போய்க் கொண்டிருந்தது. ஆனா இப்போ அதுக்கு எல்லாம் இடமே இல்லை, காரணம் அங்கு இருக்கும் கூட்டம்தான், இதற்கு முன்பு கஸ்தூரி, மதுமிதா என யாராவது உள்ளிருந்து நியாயங்களை எடுத்துரைத்ததுண்டு.
இப்போ ஒன் மேன் ஆர்மிபோல சேரன் மட்டுமே வேதம் ஓதுகிறார், ஆனால் அவரையும் சரி அவருடைய கருத்துகளும் சரி ஒதுக்கப்பட்டே வருகிறது.

இந்தவார லக்சரி பட்ஜெட்டுக்காக, நேற்று முன்தினம் தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாட்டுப்புற கலைஞர் காளீஸ்வரன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று போட்டியாளர்களுக்கு நாட்டுப்புற கலைகளை கற்றுக்கொடுத்தார்.
நேற்றைய நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதில் சாண்டி வில்லுப்பாட்டு பாடியதன் மூலம் பல உண்மைகள் நக்கலாக சொல்லப்பட்டது. இவருக்கு பக்கவாத்தியங்களாக முகென், லோஸ்லியா, வனிதா ஆகியோர் இருக்கின்றனர்.
சாண்டி தன்னுடைய நண்பன் கவினைப் பற்றிய உண்மைகளை உளறிக் கொட்டினார். கவினைக் கலாய்ப்பதாய் நினைத்து, ஆரம்பத்தில் 4 பேரை காதலித்த கவின், தற்போது லோஸ்லியாவை காதலிக்கிறார் என்று சொல்லி கலாய்த்துவிட்டார்.
சாண்டியின் மனக் கருத்து இதுதான் என்பதனை கவின் உணர வேண்டும், அவர் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்க முடியாதவராக இருக்கும் சாண்டியின் மனம் பொங்கியது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
