Entertainment
கவின் செய்யும் செயலைப்பாருங்க- மக்களை எச்சரித்த சேரன்!!
பிக் பாஸ் 3 ஆரம்பித்த சில நாட்களே ஆனதாகத் தெரிகையில், அதற்குள் 80 வது நாளை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் சேரன் வெளியேற்றம் பிக் பாஸ் வீட்டினை சோகமாக்கியது.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சேரன், ரகசிய அறைக்குள் அனுப்பப்பட்டுள்ளார். மேலும் பிக் பாஸ் கூறியபடி அவர் உள்ளிருந்து, போட்டியாளர்களின் செய்கைகளை வேடிக்கைப் பார்த்தார்.

மியூசிக்கல் சேர் டாஸ்க் முடிவடைந்தபின்னர், ஒவ்வொருவரும் ஆங்காங்கே அமர்ந்திருக்க, பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் உணவு கிடைக்கும் என்று அறிவித்தார். அதனால் அனைவரும் பெரும் ஆவலில் இருந்தனர்.
ஆனால் என்ன நடந்தால் எனக்கு என்ன? என்பதுபோல கவின் லாஸ்லியாவிடம் காதல் குறித்து பேச மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்.
காதல் விவகாரம் பற்றி இனிமேல் இங்கு பேச மாட்டேன் என்று கூறிய கவின், அதைப் பற்றி பேசுமாறு லாஸ்லியாவினை திரும்பத் திரும்ப வலியுறுத்துவதனை மக்கள் பார்க்க வேண்டும் என்று சேரன் கூறினார்.
இதன்மூலம் கவினுக்கு வாக்குகள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவின் இப்போது மட்டுமா அநியாயமாக நடந்துகொள்கிறார், அவர் எப்போதுமே அப்படி நடந்துகொள்ளக் கூடியவர்தான் என்று சொல்கின்றனர் பார்வையாளர்கள்.
