ரீமேக் படங்களின் உரிமையை வாங்கி குவிக்கும் கெளதம் மேனன்…. காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் காக்க காக்க போன்ற அதிரடி ஆக்சன் முதல் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற காதல் படம் வரை தனது மாறுபட்ட கதைகளால் தனக்கென தனி இடத்தை பிடித்த இயக்குனர் என்றால் அது கெளதம் மேனன் தான். இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும்.

தற்போது வரை இவரது விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள். மேலும் கெளதம் மேனன் சமீபகாலமாக படங்களை இயக்குவதை விட நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். பல படங்களில் நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கெளதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படத்தை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் ரீமேக் படங்களின் உரிமையை கெளதம் மேனன் கைப்பற்றி வருகிறாராம்.

அதன்படி இயக்குனர் கெளதம் மேனன் மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நாயாட்டு என்கிற படத்தின் ரீமேக் உரிமையை ஏற்கனவே கெளதம் மேனன் வாங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது கன்னடத்தில் ஹிட்டான கருட கமன வ்ரிஷப வாகன என்கிற படத்தின் ரீமேக் உரிமையையும், மலையாளத்தில் ஹிட்டான கப்பேலா படத்தின் ரீமேக் உரிமையையும் கெளதம் மேனன் கைப்பற்றியுள்ளாராம். ஆனால் இந்த படங்களை அவரது தயாரிப்பில் வேறு இயக்குனர்களை வைத்து இயக்க போகிறாரா அல்லது வேறு நிறுவனங்களுக்கு கைமாற்றி விட போகிறாரா என்பது போன்ற தகவல்கள் தெரியவில்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment