Entertainment
படத்தை முடிக்க விக்ரம் உதவி தேவையில்லை: அதிரடி முடிவு எடுத்த கௌதம் மேனன்

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளிவர வேண்டிய படம் என்றும், ஆனால் கௌதம் மேனன் மற்றும் தயாரிப்பாளரின் காரணமாக இந்த படம் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை செட்டில் செய்தால் மட்டுமே படப்பிடிப்புக்கு வருவேன் என விக்ரம் கூறியதாகவும் இதனை அடுத்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் விக்ரம் சம்மந்தப்பட்ட காட்சிகள் இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே படமாக்க வேண்டி இருப்பதால் விக்ரம் இல்லாமலேயே அந்த படத்தை முடித்துவிட கௌதம் மேனன் முடிவு செய்துள்ளாராம் இதற்காக கிளைமாக்ஸ் மட்டும் இடைவேளை பகுதி காட்சிகளை மாற்றி, இருக்கும் காட்சிகளை வைத்தே கிளைமாக்சை எடிட்டர் மூலம் தயார் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
எனவே விக்ரம் உதவி இல்லாமலேயே துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனன் ரிலீஸ் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
