
Entertainment
சிம்புவுடன் இணையும் கவுதம் கார்த்திக்.. படத்துல யாரு ஹீரோ அப்போ !!..
நடிகர் சிம்பு ,மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துமுடித்துள்ளார். இதில் விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்குப் பிறகு சிம்பு – கெளதம்மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க தாமரை பாடல்கள் எழுதுகிறார்.
இப்படத்தில் சிறுவயது தோற்றத்திற்காக சிம்பு 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டரில் இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடிப்பில் வெளியான படம் ‘முஃப்தி’. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ் ரீமேக்கையும் இயக்குநர் நரதனே இயக்கி வந்தார்.
அந்தப் படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்துமே பேசிமுடிந்ததால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நடிகர் சிம்பு ‘பத்து தல’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.இப்படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கயுள்ளார்.மேலும் இந்த படத்தில் சிம்பு கேங்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.
ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் ஏ.ஜி.ஆர் கேரக்டருக்காக தனது கெட்டப்பை சிம்பு மாற்றியுள்ளார். பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் வரும் 27ம் தேதி முதல் சிம்பு நடிக்கும் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது
டிமான்டி காலனி இரண்டாம் பாகமா ?.. உறுதி செய்த படக்குழு..
