கவுதம் கார்த்திக் – மஞ்சிமா காதல் ஜோடியின் கலக்கல் திருமண புகைப்படம்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் கவுதம் கார்த்திக், இவர் நவரச நாயகன் கார்த்திக் மகன் ஆவார். தற்போழுது கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியிட்டிற்காக காத்திருக்கும் திரைப்படம் பத்து தல , அந்த படத்தில் கவுதம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வை ராஜா வை, ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

கவுதம் கார்த்திக்குடன் தேவராட்டம் படத்தில் ஒன்றாக நடித்த மஞ்சிமா இருவரும் 3 வருடங்கலாக காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே.. கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் அக்டோபர் 31 அன்று சமூக ஊடகங்களில் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் நவம்பர் 28 இன்று சென்னையில் மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இந்த ஜோடி அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்காக ஊட்டி மற்றும் சென்னையில் இரண்டு வரவேற்புகளை நடத்த இருப்பதாக தகவல்கள் பேசப்பட்டு வருகிறது.

தற்போழுது கவுதம் கார்த்திக் – மஞ்சிமா காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் இருவரும் கழுத்தில் மாலையுடன் எளிமையான திருமண உடையில் இருப்பதை பார்க்கலாம்.

அஜித்துடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி! இன்ஸ்டாகிராமில் அடியெடுத்து வைத்ததுமே இப்படியா?

மேலும் சிறப்பாக நடிகர் விக்ரம் பிரபு நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.