Connect with us

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா ஜோடிக்கு நிச்சயதார்த்தமா? வைரலாக போட்டோ.!

89477324 1

பொழுதுபோக்கு

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா ஜோடிக்கு நிச்சயதார்த்தமா? வைரலாக போட்டோ.!

தமிழ் சினிமாவில் அதிகமான வெற்றி படங்களை கொடுத்து முன்னாள் நடிகர் நவரச நாயகன் கார்த்திக் மகன் தான் கெளதம் கார்த்தி. நடிகர் முத்துராமனின் பேரனும் ஆவார். கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருப்பார்.

சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்,அவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அவரின் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

அதை தொடர்ந்து தற்போழுது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பத்து தல. ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

gautham manjima 94314319

இந்த படத்தில் கௌதம் கார்த்திக் போலீஸ் கதாபாத்திரத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளது, பத்து தல படம் வெளியான பின் கௌதம் கார்த்திக்க்கு திருப்பு முனையாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் கூறியுள்ளனர்.

பொன்னியின் செல்வன்’ படக்குழுவின் முதல் பயணம் ரத்து? – ஷாக்கிங் அப்டேட் இதோ !

கவுதம் கார்த்திக் தேவராட்டம் படத்தில் ஒன்றாக நடித்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இருவருக்கும் காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கௌதம் கார்த்திக்கின் நண்பன் கோபி என்பவரின் நிச்சயதார்த்த விழாவில் தான் இருவரும் இணைந்து கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top