Connect with us

லாரன்ஸை இயக்கும் கெளதம் மேனன்… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே….

gvm 2

பொழுதுபோக்கு

லாரன்ஸை இயக்கும் கெளதம் மேனன்… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே….

லாரன்ஸை இயக்கும் கெளதம் மேனன்… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே….

கோலிவுட்டில் டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகராக உயர்ந்தவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளியான முனி படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லாரன்ஸ். இதற்காக அவர் டிரோல் செய்யப்பட்டாலும் அவரது படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது.

லாரன்ஸ்

தற்போது ராகவா லாரன்ஸ் கைவசம் துர்கா, அதிகாரம், ருத்ரன் ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்க உள்ள புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை பேய் படங்களில் நடித்து வந்த லாரன்ஸ் முதல் முறையாக காதல் ரொமாண்டிக் இயக்குனருடன் கைகோர்க்க உள்ளார்.

கெளதம் மேனன் தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக சிம்புவுடன் கூட்டணி அமைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர அவரும் ஒரு சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதல் முறையாக கெளதம் மேனன் ராகவா லாரன்ஸ் காம்போவில் ஒரு படம் உருவாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கி உள்ளது. மேலும் இது எந்த மாதிரியான படமாக இருக்கும்? த்ரில்லர் கலந்த ஹாரர் படமா? அல்லது முழுக்க முழுக்க காதல் படமா? என்பதுபோல் தற்போதே ரசிகர்கள் கனவுகாண தொடங்கி விட்டார்கள்.

ஜோஷ்வா இமை போல் காக்க, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் இந்த புதிய படத்தையும் ஐசரி கணேஷ் தான் தயாரிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top