தமிழ் சினிமாவில் அதிகமான வெற்றி படங்களை கொடுத்து முன்னாள் நடிகர் நவரச நாயகன் கார்த்திக் மகன் தான் கெளதம் கார்த்தி. நடிகர் முத்துராமனின் பேரனும் ஆவார். கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருப்பார்.
சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்,அவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அவரின் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
அதை தொடர்ந்து தற்போழுது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பத்து தல. ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாபாத்திரத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளது, அந்த காட்சிகளை முன்னணி நடிகர்களான நடிகர் சூர்யா, கார்த்தி இடம் போட்டு காமித்ததற்கு இரு நடிகர்களும் கௌதமின் நடிப்பை பெரிது பாராட்டியுள்ளனர், பத்து தல படம் வெளியான பின் கௌதம் கார்த்திக்க்கு திருப்பு முனையாக இருக்கும் என கூறியுள்ளனர்.
சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கௌதம் தற்போழுது இன்ஸ்டா பக்கத்தில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் லைவ்வில் பேசும் போது அவரது ரசிகர்கள் பல கேள்விகள் எழுப்பினர்.
ரசிகர்களை ஏமாற்றிய ஆண்ட்ரியா ! பிசாசு 2 படத்தின் அப்டேட்
அதில் குறிப்பாக கவுதம் கார்த்திக்கிடம் திருமணத்தை பற்றி கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர் விரைவில் கல்யாணம் ஆகும் என நம்புகிறேன் என கூறியுள்ளார். குறிப்பாக தேவராட்டம் படத்தில் ஒன்றாக நடித்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இருவருக்கும் காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.