ஒரே நேரத்தில் திரண்ட கூட்டம்… புதுச்சேரியில் பரபரப்பு.!!

புதுச்சேரி மாநிலத்தில் முதுநிலை எழுத்தர் பணிக்கு பதிவு செய்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 116 முதுநிலை எழுத்தர் பணிக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு பிறகு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

இந்த அறிவிப்பை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக ஏராளமான இளைஞர்கள் இன்றைய தினத்திலும் சான்றிதழ்களுடன் திரண்டனர்.

இதனிடையே வேலைவாய்ப்பை புதுப்பிக்கவும், புதிதாக பதிவு செய்ய ஒரே நேரத்தில் அதிகமானோர் கூட்டம் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. மேலும், இதனை தடுக்க வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் கவுண்டர்கள் திறக்க வேண்டும் என அதிகாரிகளிடம் இளைஞர்கள் கேட்டுக்கொண்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment