Connect with us

கேட் தேர்வு எப்போது? மத்திய அரசு அறிவிப்பு

News

கேட் தேர்வு எப்போது? மத்திய அரசு அறிவிப்பு

64926102e7c0139da7cd23e6df8d1674-1

நீட் தேர்வு உள்பட பல்வேறு தேர்வு தேதிகளை மத்திய அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது என்பதும் இந்த தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
அந்த வகையில் சற்று முன்னர் பொறியியல் படிப்புக்கான கேட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்பிற்காக நடத்தப்படும் கேட் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 6, 7, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 100 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வில் மெக்கானிக் கம்ப்யூட்டர் சயின்ஸ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் உள்பட 27 பாடப்பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக இரண்டு தாள்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

மேலும் இந்த தேர்வுக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாமத கட்டணத்துடன் அக்டோபர் 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நவம்பர் 1ஆம் தேதி கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top