சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: ரூ.1000ஐ நெருங்கியதால் பரபரப்பு!

கடந்த மாதம் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்ந்ததை அடுத்து 900 ரூபாய் 50 காசு என விற்பனையாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் இன்று சமையல் எரிவாயுவை ரூபாய் 15 உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் சமையல் எரிவாயு விலை ரூபாய் 915.50 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வருடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 300 உயர்த்தப்பட்டுள்ளது வரலாறு காணாத உயர்வு என பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அதில் இருக்கும் நிலையில் சமையல் எரிவாயு விலையும் உயர்த்திக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment