நாக்கில் எச்சி ஊறும் சுவையில் கருவாடு வைத்து ரசம் செய்யலாம் தெரியுமா?

நாம் பல விதமான ரசம் வைத்திருப்போம் இப்போ புதுமையா கருவாடு வைத்து ரசம் செய்யலாம் வாங்க..

செய்ய தேவையான பொருட்கள்:

நெத்திலி கருவாடு – 5 துண்டுகள்

தக்காளி – 2 பெரியது

வெங்காயம் – 1

புளி – எலுமிச்சை அளவு

தனியா தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

மிளகு – 2 தேக்கரண்டி

பூண்டு – 10 பல்

உப்பு – தேவைக்கு ஏற்ப

காய்ந்த மிளகாய் – 4

கொத்தமல்லி – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 1

எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

இஞ்சி – சிறிதளவு

யசோதா ட்ரெய்லரைப் பகிர்ந்து – ‘சமந்தாவை காதலித்தேன்’ என கூறிய மாஸ் ஹீரோ!

செய்முறை:

கருவாட்டை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும் , பின் வறுத்து வைக்கவும். வறுத்த கருவாட்டை சிறிய துண்டுகளாக வெட்டவும்.வெங்காயம், 1 தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் 1 தக்காளியை சேர்த்து லேசாக பர பர என அரைத்துக்கொள்ளவும்.

புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்.

பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாணுக்கு டும் டும் டும் முடிந்தது! யாருலா கல்யாணத்துக்கு போனாங்க தெரியுமா?

பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும். மீதமுள்ள ஒரு தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள் முதலியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் எண்ணெய்யில் வதக்கி பின் புளி தண்ணீர் கொஞ்சம் அதிகமாகவே சேர்க்க வேண்டும்.

பிறகு வறுத்த கருவாடு துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து கருவாடு வெந்து வாசனை வரும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான கருவாட்டு ரசம் தயார். இதற்கு நெத்திலி கருவாட்டையும் பயன்படுத்தலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.