கருடன் படத்தில் மொரட்டு வில்லனாக மிரட்டிய நடிகர்.. அது இவர்தானா? மளமளன்னு வளர்ந்துட்டாரே..!

கருடன் படம் பார்த்தவர்களுக்கு சூரியின் நடிப்பு எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு கதையின் நாயகனாக வளர்ந்து வரும் ஹீரோவாக அவருடைய இந்த உழைப்பு கருடனைப் போல் இன்னும் அவரை மேலே உயரத்திற்கு அழைத்துச் செல்லும். கருடன் படத்தில் இடைவேளைக் காட்சியில் சூரி சாமியாடி வில்லன் ஒருவரின் கையை வெட்டுவாரே அந்த நடிகர் யார் தெரியுமா?

அதற்கு முன் ஒரு சின்ன பிளாஷ்பேக். இன்றும் அக்கா-தம்பியின் பாசத்தைப் பொழியும் பாடல்களில் ஒன்றான கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே… என்ற பாடலைக் கேட்டுருப்பீர்கள். நடிகர் சசிக்குமார் தான் தயாரித்து இயக்கிய முதல் படமான சுப்ரமணியபுரம் படத்திற்கு அடுத்தபடியாக இயக்கிய திரைப்படம் தான் ஈசன். கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த ஈசன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் அபிநயாவின் தம்பியாக ஒரு சிறுவன் வந்து டெக்னாலஜியில் மிரட்டுவாரே அந்தச் சிறுவன்தான் இந்த கருடன் பட வில்லன்.

முரளிக்கு தன் குரலில் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த இசைஞானி..இவ்ளோ ஹிட் லிஸ்ட்டா?

ஈசன் படத்தில் அறிமுகமான துஷ்யந்த் பல வருட இடைவெளிக்குப் பின் இப்போது இளைஞராக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சசிக்குமாரை எதிர்க்கும் வில்லனாக நடித்துள்ளார். மேலும் படம் முழுக்க இவரது கதாபாத்திரம் வரும். இடைவேளைக் காட்சியில் சசிக்குமாரைக் கொல்ல வரும் போது சூரி இவரது கையை வெட்டி விடுவார். அதன்பின் சசிக்குமாரை இவர் கொல்லும் போது இறுதிக் காட்சியில் சூரி இவரைப் பழிவாங்குவார்.

இவ்வாறு துஷ்யந்த் முதல் படத்தில் அக்கா-தம்பி பாசமழையைப் பொழிந்துவிட்டு பல ஆண்டுகள் கழித்து இதிலும் நடிகை ரோஷினிபிரியாவின் கொடூர தம்பியாக நடித்திருப்பார் துஷ்யந்த். இந்தக் கதபாத்திரம் மூலம் அவருக்கு கம்பேக் கிடைத்திருக்கிறது. இதிலும் சசிக்குமாரே நடித்திருக்கிறார். இப்படி முதல் இரண்டு படங்களும் சசிக்குமார் நடித்த படத்திலேயே கிடைத்தது ஆச்சர்யம் தான். இவர் பிரபல குணச்சித்திர நடிகர் ஜெயப்பிரகாஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில படங்களிலும் நடித்துவரும் துஷ்யந்த் பல சிறப்பான கதாபாத்திரங்களில் நடிக்க வாழ்த்துக்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...