பாட்டி கை பக்குவத்தில் பூண்டு ஊறுகாய் இனி நம்ம வீட்டுலே செய்யலாமா..

நாம் சாப்பிடும் போது பொதுவாக ஊறுகாய் சாப்பிடுவது வழக்கம் தான், அந்த வகையில் செரிமானத்தை அதிகரிக்கும் பூண்டு ஊறுகாய் இனி நம்ம வீட்டுல செய்து பார்க்கலாமா…

தேவையான பொருட்கள்:

பூண்டு – 200 கிராம்

மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு ஏற்ப
பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி
கடுகுப்பொடி – 1 தேக்கரண்டி
வெந்தயப்பொடி – 1 தேக்கரண்டி
வினிகர் – 2 தேக்கரண்டி

செய்முறை :

* முதலில் 200 கிராம் பூண்டுகளை தோல் உரித்து சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும், பின்பு சுத்தமான துணியில் வைத்து ஒரு மணி நேரம் ஆறவிடவும்.
* ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், கடுகுப்பொடி, வெந்தயப்பொடி, வினிகர் ஊற்றி ஒன்றாக கிளறி விடவும்.
* வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு கடுகு சேர்த்து தாளித்து பூண்டு கலவையில் சேர்த்து மூடிவிடவும்.
* கால் மணிநேரம் கழித்து மீண்டும் திறந்து கிளறிவிடவும், பூண்டு உடைந்து விடாமல் பார்த்து கொள்ளவும்

கிராமத்து ஸ்டையில் கார சாரமான பருப்பு உருண்டைக் குழம்பு!

* எண்ணெய் தனியாக பிரியும் வரை பூண்டு தொக்கை வேக விடவும்.
*பூண்டு கலவையில் நன்கு ஊறியதும் கைபடாமல் எடுத்து பரிமாறவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.