தித்திக்கும் சுவையில் பூண்டு ஊறுகாய் வீட்டுலே செய்யலாம் வாங்க … கடையிலே வாங்க மாட்டிங்க…

தென்னிந்திய உணவு முறையில் ஊறுகாய் முக்கியமானது, அதிலும் பூண்டு ஊறுகாய் அனைவருக்கும் பிடிக்கும். வாய்வு, அஜீரண பிரச்சனைகளுக்கு ஏற்ற பலனை தரும்.
செய்ய தேவையான பொருட்கள் :

பூண்டு – 1 கப்

எலுமிச்சை சாறு – 1/2 கப்

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

வறுத்த சீரகம் – 1 1/2 தேக்கரண்டி

வறுத்த வெந்தயம் – 1 தேக்கரண்டி

வறுத்த மல்லி – 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி

உப்பு – சுவைக்கு ஏற்ப

நல்லெண்ணெய் – 1/4 கப்

செய்முறை :

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெயை ஊற்றி பூண்டை போட்டு வதக்க வேண்டும். அடுத்து முன்னதாக வறுத்து வைத்துள்ள வெந்தயம், சீரகம், மல்லியை, மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின் அதனை வாணலியில் உள்ள பூண்டுடன் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். இதற்கு நல்லெண்ணெய் நிறைய சுற்றினால் சுவை பலமாக இருக்கும்.

அடுத்து எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும் , நன்கு கெட்டியாகும் வரை அடுப்பில் மிதமான தீயில் வைக்க வேண்டும்.

கெட்டியானால் அதில் மேலும் தேவையான எண்ணெய் சேர்த்து, 5-6 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.

MS தோனிக்கும் ஸ்டார்ட்டிங் பிரச்சனையா…. Yamaha RD350 ஐ ஸ்டார்ட் செய்யும் வைரல் வீடியோ !

பிறகு அதனை குளிர வைத்து, ஒரு காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு, பயன்படுத்த வேண்டும். இப்போது பூணடு ஊறுகாய் தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews