கங்குலியின் வாழ்க்கை படம்: கங்குலி கேரக்டரில் யார்?

66b9f7c21078ac3fa74d7e06a1285518-1

பிரபல கிரிக்கெட் வீரர்களான தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது அடுத்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

தற்போதைய பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ரன்பீர்கபூர் கங்குலியின் கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தை தொடங்குவதற்கு கங்குலி அனுமதி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது 

பாலிவுட் வட்டாரத்தில் பல ஆண்டுகளாக கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது முதன்முறையாக கங்குலி ஒப்புதல் கொடுத்து விட்டதால் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக ஆரம்பமாக உள்ளது

கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்படும் என்றும் கங்குலி ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment