அஜித்தின் துணிவு ரசிகர்களுக்கு கேங்ஸ்டா பாடல் அப்டேட்! தேதி எப்போ தெரியுமா?

மாஸ் ஹீரோ அஜித் தற்போது மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். பொங்கல் ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார்.

உண்மை கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கு வருவதாக, படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது. படத்தின் முதல் 2 சிங்கிள் வெளியாகி மாஸாக ஹிட் அடித்து வருகிறது.

இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாவதால் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் ’துணிவு’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் இந்த படத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

வேற லெவலில் ‘கனெக்ட்’ திரைப்படம்: டுவிட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்!

ஜிப்ரான் இசையில் கிடைத்துள்ள மாஸ் அப்டேட் என்னவென்றால் துணிவு படத்தின் 3வது பாடல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போழுது வெளியாகியுள்ளது.

சீண்டுனா சிரிப்பவன் சுயவழி நடப்பவன் he’s a gangstaa என தொடங்கும் மூன்றாவது சிங்கள் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது .

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.