Connect with us

விஷால் பட பாணியில் பண மோசடி செய்த பயங்கர கும்பல் குண்டாஸில் கைது..

லட்சம்

செய்திகள்

விஷால் பட பாணியில் பண மோசடி செய்த பயங்கர கும்பல் குண்டாஸில் கைது..

பிரபல தனியார் நிதிநிறுவனத்திடமிருந்து செல்போனில் ஆன்லைன் மூலம் கடன் தருவதாக பலலட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த 3 பேரை மயிலாடுதுறை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மோசடி கும்பலை சேர்ந்த மேலும் மூவரை தேடி வருகின்றனர் கைதுசெய்யப்பட்டதில் இருவர் குண்டாஸ் சட்டத்தின்கீழ் புழல்சிறையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அபிராமி நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் மணிகண்டன்(36). மரவாடியில் கூலி வேலை பார்க்கும் இவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் தனியார் நிதி நிறுவனத்தில் (மகேந்திரா பைனான்ஸ்) இருந்து தங்களுக்கு லோன் வேண்டுமா என கேட்டு செல்பொனில் தொடர்பு கொண்ட நபர் ரூ.5 லட்சம் தனிநபர் கடன் (லோன்) தருவதாக கூறியுள்ளார். லோன் பெறுவதற்கு முதலில் லோன் பிராசஸிங்குக்கு இன்ஸியல் தொகையாக ரூ.8000-ஐ வங்கிக்கணக்கில் செலுத்தச் சொல்லியுள்ளார். அந்த வங்கிக் கணக்கு பாண்டிச்சேரியை சேர்ந்த சுந்தரபாண்டியன் என்றுஇருந்தது அவரிடம் கேட்டதற்கு பணத்தை அனுப்புங்கள் என கூறியதால் மணிகண்டன் அனுப்பியுள்ளார்.

பணம் அனுப்பியதைத் தொடர்ந்து மறுநாள் ரூ.7340 அனுப்ப சொல்லியுள்ளார். இதைத்தொடர்ந்து, பல செல்பேசி எண்களில் இருந்து பலர் மணிகண்டனை தொடர்பு கொண்டு கேட்டதையடுத்து, லோன் தொகை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பல தவணைகளாக மொத்தம் ரூ.67,880-ஐ வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால், மணிகண்டனுக்கு லோன் கிடைக்கவில்லை.

இதையடுத்து, இதுவரை கொடுத்த பணத்தை திரும்பத்தரும்படி கேட்டதற்கு மணிகண்டன் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கியிருப்பதால், அதனை கேன்சல் செய்ய வேண்டும் என்றால் மேலும் ரூ.10,000 கட்டவேண்டும் என கேட்டு வாங்கியுள்ளனர். அதன்பின்னர் பணத்தை திரும்பக் கேட்டபோது, ஐ.டி ஃபைல் செய்வதற்காக ரூ.11,700 மற்றும் அதைத்தொடர்ந்தும் பலமுறை சிறுக சிறுக மொத்தமாக ரூ 1,28,780 கட்டியுள்ளார். முடிவில், தான் முழுமையாக ஏமாந்ததும், தனது பணம் திரும்பக் கிடைக்காது என்பதும் தெரிந்த பின்னர் மணிகண்டன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டடது தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர், ஏமாற்றுப் பேர்வழிகளின் செல்போன் டவரைக் கண்காணித்து தேடிச் சென்ற போலீசார் முடிவில் காட்டுமன்னார்கோயிலில் பதுங்கியிருந்த 3 நபர்களை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுக்கா வெண்ணங்குழி கீழத்தெருவைச் சேர்ந்த சஞ்சய்(22), சித்தார்த்தன் (20), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ரம்ஜான் தைக்கால் புதுத்தெருவைச் சேர்ந்த சையது அப்துல்கலாம்(25) ஆகியோர் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து லேப்டாப் ஆன்ட்ராய்டு உள்ளட்ட 16 செல்போன்கள், 28 சிம் கார்டுகள் வங்கியின் போலி பாஸ்புத்தகம் மற்றும் செக்குகள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்கள் தமிழகத்’தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோரிடம் இதேபோல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், தப்பியோடி தலைமறைவாகவுள்ள அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெருவைச் சேர்ந்த அமர்நாத், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் புதுப்பட்டியைச் சேர்ந்த கணேஷ் பாண்டிச்சேரியை சேர்ந்த சுந்தரபாண்டியன் ஆகிய மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட அனைவரும் பட்டதாரி இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடியில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அனைவரையும் விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்கள் ஆவனங்களை கொடுக்கவோ அறிமுகம் இல்லாத செல்போன் எண்கள் மூலம் லோன் கொடுப்பதாக கூறுவதை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பறிமுதல் செய்த ஆவணங்களை மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, டிஎஸ்பி வசந்தராஜ் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

கைதுசெய்யப்பட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள வெண்ணங்குழியைச் சேர்ந்த ரஞ்சித்(22) காட்டுமன்னார்கோயில் ரம்ஜான் தைக்கால் புதுத்தெருவைச் சேர்ந்த சையது அப்துல்கலாம்(25) ஆகிய இருவரும் 2019ஆம் ஆண்டு இதேபோல் ஆன்லைன் கடன் மோசடியில் ஈடுபட்டு சென்னையில்கைதுசெய்யப்பட்டு புழல்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர், அவர்கள்மீது குண்டர்சட்டம் பாய்ந்து அதை அனுபவித்துவிட்டு மீண்டும் அதே தொழிலில் ஈடுபட்டு தற்பொழுது கைதுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று மேலும் ஏமார்ந்தவர்கள் வேதாரண்யம், ஆயக்காரரன்புலம், செட்டியார்குட்டகையை அன்பழகன் மகன் சந்தோஷ், என்பவரிடம் ரூபாய்.3000/- மும், வேலூர் வாணியம்பாடி, ஆண்டியப்பனூரை சேர்ந்த முனியப்பன் மகன் சுரேஷ் என்பவரிடம் ரூ.29,000/- மும், வேலூர் வாணியம்பாடி, காளியம்மன்கோவில் வத்தம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திகேயன் என்பவரிடம் ரூபாய். 28,900/-மும், திருச்சி குப்பன்குளம், கண்ணன் தெருவில் வசிக்கும் சுந்தர்ராஜன் மகன் பாலுசாமி என்பவரிடம்

ரூ.16,000/-மும், பெங்களுர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெயசந்திரன் மகன் மனோஜ்என்பவரிடம் ரூ.26,300/- மும், கோயம்புத்தூர், V.K. ரோடு, பாலாஜி நகரில் வசிக்கும் ராஜம்முகம்மது மகன் சிங்கார ரூபி என்பவரிடம் ரூ.12,000/-மும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேகர் மகள் மஞ்சுளா என்பவரிடம் ரூ.3000/- மும், வங்கி கடன் வாங்கி தருவதாக மேற்கண்ட நபர்கள் போனில் பேசி, பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.

வாய்ப்பேச்சினை மட்டுமே வைத்துக் காரியம் சாதிப்பவர்களை வாயால வடை சுடுபவர்கள் என கூறுவார்கள், ஆனால் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் வாயால் வடைசுட்டு அதை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்த பலே கில்லாடிகள்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top