விநாயகர் சதுர்த்தி- திசைமாறி காட்சியளிக்கும் விநாயகர்

90105d0240577ede4881b224586eba00
விநாயகப்பெருமான் திசைமாறிக் காட்சியளிப்பது பிள்ளையார் பட்டியில் தான். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டி உள்ளது. பிள்ளையார் பெயரிலேயே உள்ள ஊர் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வெற்றி பெற வேண்டுமானால் விக்னேஸ்வரரை வழிபட வேண்டும். ஆனைமுகப் பெருமான் ஆலயங்களில் மட்டுமல்லாமல் அரசமரம், ஆறு, குளங்களின் கரைகளிலும்.. இன்னும் சொல்லப்போனால் வீதிகள் தோறும் கூட வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். அப்படிப்பட்ட விநாயகப்பெருமான் திசைமாறிக் காட்சியளிப்பது பிள்ளையார் பட்டியில் தான். இந்தப் . பிள்ளையார் பெயரிலேயே உள்ள ஊர் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

இந்த ஆலயத்தில் வடக்குப் பார்த்து வீற்றிருந்து கற்பக விநாயகராக காட்சியளிக்கின்றார். எனவே, தான் வரத்தை அள்ளி, அள்ளித் தருகின்றார். ஒரு வரது ஜாதகத்தில் கேது திசை அல்லது ஏது திசை நடந்தாலும் ஆதரவுக்கரம் நீட்டுவது ஆனைமுகப்பெருமான் தான். அந்த ஆனைமுகப் பெருமான் கற்பக விநாயகராக பிள்ளையார்பட்டியில் காட்சிதருவதால், அங்கு சென்று வழிபடுபவர்களுக்கு கற்பக விருட்சமாக வாழ்க்கை மலர்கிறது. கனவுகள் அனைத்தும் நனவாகின்றது. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியன்று அவரை பூவணிந்தும், பாவணிந்தும் வழிபட்டால் தேவைகள் பூர்த்தியாகும். செல்வ வளம் பெருகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.