சொன்னா கேட்க மாட்டீங்களா..? ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் பறிமுதல்!!!

சேலம் மாவட்டத்தில் ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான விநாயகர் சிலைகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் நாளைய தினத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுவது சூடுபிடித்துள்ளது.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் ரசாயனம் தடவிய விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய கூடாது என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தெரிவித்திருந்தது. இதற்கிடையில் நெய்காரப்பட்டியில் விநாயர் சிலை விற்கப்படும் இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ரசாயனம் கலந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதே போல் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரித்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.