விநாயகர் சதுர்த்தி! 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதால் தலைநகரில் இருக்கும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் முக்கிய ஊர்களில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை பலமடங்கு அதிகரித்து இருப்பதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.